/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்புகளை பிடிக்க அழைப்புகள் தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்
/
பாம்புகளை பிடிக்க அழைப்புகள் தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்
பாம்புகளை பிடிக்க அழைப்புகள் தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்
பாம்புகளை பிடிக்க அழைப்புகள் தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்
ADDED : நவ 12, 2025 10:51 PM
திருவாடானை: தீயணைப்பு துறையினருக்கு பாம்புகளை பிடிக்க அதிகமான அழைப்புகள் வருவதால் தவிக்கின்றனர்.
மழை காலம் துவங்கியதால் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. பாம்புகளை கண்டால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்த தீயணைப்பு துறை வீரர்களை நாடுகின்றனர். தீ விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்களில் மீட்பு பணி செய்வதுடன் பாம்புகள் பிடிப்பது போன்ற பணிகளையும் தீயணைப்பு வீரர்கள் செய்து வருகின்றனர். பாம்பு குறித்த அழைப்புகள் அதிகமாக வருவதால் சிரமம் அடைந்துள்ளனர். திருவாடானை தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:
பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டு விடுகிறோம். சமீப நாட்களாக பாம்புகளை பிடிக்க அதிகமான அழைப்புகள் வருகின்றன. நீண்ட தொலைவிற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது பாம்பு பிடிக்க அழைப்புகள் வருகிறது. இதனால் மற்ற அவசர கால பணிகள் பாதிக்கப்படுகிறது என்றனர்.
மக்கள் கூறுகையில், மழை காலங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறையினரும் பாம்புகளை பிடித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றனர்.

