/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எய்ம்ஸ் நடத்திய முதலுதவி பயிற்சி
/
எய்ம்ஸ் நடத்திய முதலுதவி பயிற்சி
ADDED : அக் 23, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி சார்பில் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அடிப்படை முதலுதவி பயிற்சி அளித்தனர்.
எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி இயக்குநர் ஹனுமந்தராவ் தலைமை வகித்தார். முதல்வர் கணேஷ்பாபு, முகமது சதக் மெட்ரிக் பள்ளி முதல்வர் சேகர் பங்கேற்று பேசினர்.
திறன் கமிட்டித்தலைவர் அனந்த லட்சுமி, உறுப்பினர்கள் டாக்டர்கள் ராஜா, முத்து சிதம்பரம், சுரேஷ், கிருத்திகா ஆகியோர் 47 தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படை முதலுதவி பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.