ADDED : ஜூலை 08, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புகள் துவங்கியது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார்.
செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக், முதல்வர் பால கிருஷ்ணன் பேசினர்.
தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் முயற்சி, பயிற்சி, தேர்ச்சி, மகிழ்ச்சி, வளர்ச்சி, தொடர்ச்சி என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார். நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஏற்பாடுகளை செய்தனர்.
