/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீபாவளி முன்பணம் முறையாக கிடைக்காததால் மீனவர்கள் அவதி கண்டுகொள்ளாத மீன்வளத் துறை அலுவலர்கள்
/
தீபாவளி முன்பணம் முறையாக கிடைக்காததால் மீனவர்கள் அவதி கண்டுகொள்ளாத மீன்வளத் துறை அலுவலர்கள்
தீபாவளி முன்பணம் முறையாக கிடைக்காததால் மீனவர்கள் அவதி கண்டுகொள்ளாத மீன்வளத் துறை அலுவலர்கள்
தீபாவளி முன்பணம் முறையாக கிடைக்காததால் மீனவர்கள் அவதி கண்டுகொள்ளாத மீன்வளத் துறை அலுவலர்கள்
ADDED : அக் 23, 2025 11:23 PM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி அத்தியட்சபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் தீபாவளி முன்பணத் தொகை முறையாக மீனவர்களுக்கு வழங்காத நிலை தொடர்வதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அத்தியட்சபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களான மொத்திவலசை, சிலையப்பன் வலசை, ஆண்டித்தேவன் வலசை, சிலம்பிநாடு, வெள்ளையன் வலசை, மொட்டையன் வலசை, வைரவன் கோவில் உட்பட்ட 42 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சேமிப்பு நிவாரணத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை மீனவ உறுப்பினர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூ.4500 அரசு வழங்குகிறது. இவற்றில் மீனவர்களின் பங்களிப்புத் தொகையும் சேர்ந்து செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் முறையான பயனாளிகளுக்கு தீபாவளி முன்பணத் தொகை வழங்காத நிலை தொடர்வதாக வேதனை தெரிவித்தனர். அத்தியட்சபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் நாகராஜன் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ரூ.4500 அரசு முன்பணம் வழங்குகிறது. இவற்றில் மீனவர்களின் பங்களிப்பு தொகையாக ரூ.1610 சேர்த்து ரூ.4500 ஆகும். 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில் பயனாளிகளின் எண்ணிக்கை 700. தற்போதைய நிலையில் மீனவர்கள் ஒரு சிலருக்கு
ரூ.3000, மற்றவர்களுக்கு ரூ.1500ம், மீதமுள்ளவர்களுக்கு இதுவரை வங்கி கணக்கில் ஏற்றப்படாமல் உள்ளது. மீன்பிடி குறைவு காலம் என கணக்கிட்டு ரூ. 6000 இதனுடன் சேர்த்து தனியாக வழங்கப்படும். அதுவும் தற்போது வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆதார் கார்டு, ரேஷன், ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியும் இதுவரை வழங்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாளுகின்றனர்.
எனவே மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

