/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மறு சீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு போராட்டம் நடத்த மீன்துறை ஊழியர் முடிவு

ADDED : ஜூலை 12, 2025 04:58 AM

ராமநாதபுரம்: மீன் வளத்துறையில் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடப்பதாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மீன் துறை ஊழியர் சங்கத்தின் 10 வது அமைப்பு தின விழா நடந்தது. மீன் துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் மண்டலத்தலைவர் சரத்மோகன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் பேசினார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, பாலுச்சாமி, மெய்யசக்தி வாழ்த்தினர். தமிழ்நாடு மீன் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மகாராஜன் கூறியதாவது:
மீன் வளத்துறையில் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கான போராட்டத்தை மாநில மையம் அறிவித்தவுடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்றார். நிறைவாக மண்டல பொருளாளர் நடேஷ் பிரபு நன்றி கூறினார்.