/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜெலட்டின், டெட்டனேட்டர்களை வீட்டில் பதுக்கிய மீனவர் கைது: மூவர் தப்பி ஓட்டம்

ADDED : டிச 22, 2024 02:15 AM

திருவாடானை:தொண்டி புதுக்குடி மீனவர் கிராமத்தில் போலீசார் வீடுகளில் நடத்திய சோதனையில் 130 ஜெலட்டின்கள் மற்றும் 200 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து மீனவர் முத்துக்குமாரை கைது செய்தனர். கணவன், மனைவி உட்பட மூவர் தப்பியோடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக வீடுகளில் ஜெலட்டின், டெட்டனேட்டர் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் வீடுகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் சாக்கு மூடையில் 130 ஜெலட்டின் குச்சிகள், 200 டெட்டனேட்டர்கள், 6 மீட்டர் பீஸ் ஒயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 42, என்ற மீனவரை கைது செய்தனர்.
போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய மற்றொரு மீனவர் செந்தில்குமார், அவரது மனைவி காளீஸ்வரி, மீனவர் அப்பாஸ் ஆகிய மூவரை தேடி வருகின்றனர். இவர்களில் செந்தில்குமார் ஆக.20ல் எஸ்.பி.பட்டினம் அருகே 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ பீஸ் ஒயரை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர் ஆவார்.