/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி கடலில் மூழ்கி மீனவர் பலி
/
தனுஷ்கோடி கடலில் மூழ்கி மீனவர் பலி
ADDED : செப் 24, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் இருந்து நேற்று உமயசங்கர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் சென்ற முருகன் 59, உள்ளிட்ட 7 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் வீசிய வலையை இழுக்க மீனவர் முருகன் குதித்தார். கடலில் கொந்தளிப்பு இருந்ததால் அலையில் சிக்கி மூச்சுத் திணறி மயங்கினார். சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்தார். தனுஷ்கோடி மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி விசாரிக்கிறார்.