/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன் பிடிக்க சென்ற மீனவர் மூழ்கி பலி
/
மீன் பிடிக்க சென்ற மீனவர் மூழ்கி பலி
ADDED : டிச 03, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு பகுதியில் குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.
வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவர் பால்சாமி 70. இவர் அங்குள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக வலையுடன் சென்றார். குளத்தில் வலை வீசிய போது தவறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
ராமநாதபுரம் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர் மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான வீரர்கள் போராடி பால்சாமியின் உடலை மீட்டனர்.