தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/2 நாளுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அனுமதி

2 நாளுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அனுமதி

2 நாளுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அனுமதி


UPDATED : நவ 04, 2026 11:11 AM

ADDED : நவ 04, 2026 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:11 AM ADDED : நவ 04, 2026 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:

முரசு புயல் கரையை கடந்ததால் 2 நாள்களுக்கு பின் இன்று (அக்.,4) ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

வங்கக் கடலில் உருவான முரசு புயலால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.

இந்நிலையில் புயல் நேற்று கரையை கடந்ததால், மீனவர்களுக்கான தடை விலகியது.

இதையடுத்து இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இதனால் நேற்று படகுகளில் எரிபொருள், ஐஸ் பார்களை மீனவர்கள் ஏற்றினர்.

2 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன் வரத்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us