தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர்கள் விழிப்புணர்வு முகாம்

மீனவர்கள் விழிப்புணர்வு முகாம்

மீனவர்கள் விழிப்புணர்வு முகாம்


UPDATED : செப் 06, 2026 05:27 PM

ADDED : செப் 06, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 05:27 PM ADDED : செப் 06, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை:கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் கீழக்கரை மரைன் போலீஸ் சார்பில் நடந்தது. ராமேஸ்வரம் பிரிவு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி தலைமை வகித்தார்.

எஸ்.ஐ., சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். இதில், மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் லைவ் ஜாக்கெட் மற்றும் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். மன்னார் வளைகுடா கடலில் வித்தியாசமான பொருட்கள் தென்பட்டால் உடனடியாக மரைன் போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாரதி நகர், விவேகானந்தபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us