/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் முற்றுகை
/
ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் முற்றுகை
ADDED : டிச 08, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அருகே வங்கியில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
டிச.4ல் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மற்றும் இரு படகுகளை விடுவிக்க கோரி நேற்று ராமேஸ்வரத்தில்மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள வங்கி முன்பு இந்திய கம்யூ., கட்சியினர் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் வங்கி பணிகள்ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூ., தங்கச்சிமடம் கிளை செயலாளர் ரவி, காரல்மார்க்ஸ், மீனவ பெண்கள் பலர் பங்கேற்றனர்.