/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவுவிழாவுக்கு பயணம் மீனவர்கள் உறுதி
/
கச்சத்தீவுவிழாவுக்கு பயணம் மீனவர்கள் உறுதி
ADDED : பிப் 18, 2024 02:40 AM
ராமேஸ்வரம் : -கச்சத்தீவு விழாவுக்கு திட்டமிட்டபடி நாட்டுப்படகில் 178 மீனவர்கள் செல்வோம் என கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு பயணக் குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாரம்பரிய மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது:
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை அரசு கைது செய்து அவர்களுக்கு தண்டனை விதித்து மீண்டும் சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் இலங்கையை மத்திய அரசு கண்டிக்காமல் அலட்சியமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
மீனவர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்காவிட்டால்போராட்டம் நடத்துவோம். இந்நிலையில் பிப்.23, 24ல் நடக்கும் பாரம்பரிய கச்சத்தீவு சர்ச் விழாவுக்கு 10 நாட்டுப்படகுகளில் 178 மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் செல்ல உள்ளோம். இந்த திருப்பயணத்தை யாரும் அரசியலாக மாற்றக் கூடாது என்றார்.