/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் மூழ்கி மீன் பிடிப்பு போராட மீனவர்கள் முடிவு
/
கடலில் மூழ்கி மீன் பிடிப்பு போராட மீனவர்கள் முடிவு
கடலில் மூழ்கி மீன் பிடிப்பு போராட மீனவர்கள் முடிவு
கடலில் மூழ்கி மீன் பிடிப்பு போராட மீனவர்கள் முடிவு
ADDED : அக் 06, 2024 03:47 AM
ராமநாதபுரம் : ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபடுவதை கண்டித்து போராட்டம் நடத்த பாரம்பரிய மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மீன்பிடி தொழிலில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துள்ளன.
தற்போது படகுகளில் ஆக்சிஜன் காஸ் சிலிண்டர்களை கொண்டு சென்று முகக்கவசங்களை அணிந்து நீரில் மூழ்கி மீன் பிடிக்கின்றனர்.
இதில் மீன்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வலைகளை விரித்து மீன் பிடிப்பதால் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் தொழிலாளர் சங்கம் கருணாமூர்த்தி கூறியதாவது:
ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில் தற்போது படகுகளில் ஆக்சிஜன் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்குள் மூழ்கி மீன் பிடிக்கின்றனர்.
இதனால் மீன் வளம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் மீன் வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம், மீனவர்கள் தரும் மனுக்களை குப்பை தொட்டியில் போடும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படவுள்ளது என்றார்.