/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தடையை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு அபராதம்
/
தடையை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு அபராதம்
ADDED : நவ 28, 2025 08:04 AM
தொண்டி: புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதையும் மீறி மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். நேற்று முன்தினம் தொண்டி மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த போது காற்றழுத்த தாழ்வு எச்சரிக்கை அறிவிப்பை மீறி மீன்பிடித்து விற்பனை செய்த 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.
இதன் மூலம் ரூ.11,500 அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம் வரை மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் அலுவலர்கள் கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது கிருஷ்ணாபுரம், அம்மன் குடியிருப்பு ஆகிய பகுதியிலிருந்து 4 படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து வந்து விற்பனை செய்தனர். 90 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

