/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஓட்டப்படும் டிராக்டர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஓட்டப்படும் டிராக்டர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஓட்டப்படும் டிராக்டர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஓட்டப்படும் டிராக்டர்கள்: கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : நவ 28, 2025 08:05 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பதிவு எண் இல்லாமல் ஓட்டப்படும் டிராக்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விளை நிலங்களை உழுவதற்கும், விளை பொருள்களை ஏற்றி செல்வதற்கும், டிராக்டர்களின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால், டிராக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெரும்பாலான டிராக்டர்களின் டிரைவர்களாக சிறுவர்களும், லைசென்ஸ் இல்லாதவர்களுமே ஓட்டுகின்றனர்.
அதே நேரத்தில் பெரும்பாலான டிராக்டர்கள் மற்றும் டெய்லர்களில் பதிவு எண் எழுதப்படுவதில்லை.
இதனால் எதிர்வரும் வாகனங்கள் மீது மோதி செல்லும் டிராக்டர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதால், டிராக்டர் உரிமையாளர்களும் டிரைவர்களும் எளிதாக தப்பும் நிலை உள்ளது.
அனுபவமற்ற டிரைவர்களால் இரவு நேரங்களில், டிராக்டரின் ஒரு பக்க லைட்டை மட்டும் ஒளிர செய்து செல்வதும், வளைவுகளில் திரும்பும் போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திரும்பி விபத்துக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
பெரும்பாலான விபத்துகளில் சிக்கும் டிராக்டர்கள், அரசியல் செல்வாக்காலும், போலீஸ் பிடியிலிருந்து வழக்கின்றி விடுவிக்கப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் டிராக்டர் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் பதிவு எண் எழுதப்படாமல் செல்லும் டிராக்டர்கள், லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

