/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கு கடன் தொகை 8 மாதமாக வழங்கவில்லை : தனியார் நிறுவனங்களிடம் சிக்கி நிம்மதி இழக்கும்.. அவலம்
/
மீனவர்களுக்கு கடன் தொகை 8 மாதமாக வழங்கவில்லை : தனியார் நிறுவனங்களிடம் சிக்கி நிம்மதி இழக்கும்.. அவலம்
மீனவர்களுக்கு கடன் தொகை 8 மாதமாக வழங்கவில்லை : தனியார் நிறுவனங்களிடம் சிக்கி நிம்மதி இழக்கும்.. அவலம்
மீனவர்களுக்கு கடன் தொகை 8 மாதமாக வழங்கவில்லை : தனியார் நிறுவனங்களிடம் சிக்கி நிம்மதி இழக்கும்.. அவலம்
ADDED : ஆக 17, 2025 12:13 AM

மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ஏராள மான மீனவர்கள் வசிக் கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தொழில் மேம் பாட்டிற்காகவும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடன் பெற்று அவற்றை உரிய முறையில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜன., மாதம் முதல் தற்போது வரை எவ்வித கடன் தொகையும் வழங்காமல் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் மீனவர்கள் வேறு வழியின்றி தனியார் நிதி நிறுவனங்களிடம் கூடுதல் வட்டி தொகைக்கு கடன் வாங்கி செலுத்த முடியாமல் தொடர் அவதி அடையும் சூழல் ஏற் பட்டுள்ளது.
தினைக்குளத்தைச் சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாகராஜன் கூறியதாவது:
வண்ணாங்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2017ம் ஆண்டில் விவ சாயிகளுக்கு நகைக் கடன் வழங்குவதை போன்று மீனவர்களுக்கு தொழில் மேம்பாட்டுக்காக கடன் வழங்கினர். நாட்டுப்படகிற்கு ரூ.90 ஆயிரம், நாட்டுப்படகு இல்லாத மீனவர்களுக்கு ரூ.33,000 வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டது.
அதனை இலகுவாக ஓராண்டிற்குள் மீனவர்கள் செலுத்துவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் கடந்த 8 மாதங்களாக மீனவர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் எவ்வித கடனும் வழங்காமல் அலைக்கழிப்பை தரு கின்றனர். இதனால் வேறு வழியின்றி தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி நிம்மதி இழக் கின்றனர்.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இதர மீனவ கிராமங்களில் வழங்கும் கடன் திட்டத்தைப் போல இப்பகுதியில் செயல்படுத்து வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையில்லா சான்று பெறுவதற்காக சம்பந்தப் பட்ட வங்கிகளுக்கு சென்று கேட்டால் தொடர் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் ஏராளமான மீனவர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகின்றனர் என்றார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நடப்பு ஆண்டில் ரூ.90 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 8000 ஆக உயர்ந்து உள்ளது. அதே போன்று மீன் விற்கும் பெண்களுக்கு ரூ.40,000 வட்டியில்லா கடன் வழங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீனவர்கள் வசிக்கக்கூடிய இடத்தில் உள்ள முன்னோடி வங்கிகளில் என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.
தொழில் செய்யும் இடத்தில் சென்று ஜி.பி.எஸ்., மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பிரச்னைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக வழங்கியுள்ளோம். விரைவில் கடன் வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.