/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல்; பேச்சுவார்த்தை தோல்வி

ADDED : ஆக 19, 2025 01:20 AM
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்தனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆக., 11 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆக., 15 உண்ணாவிரப் போராட்டமும் நடத்தினர். நேற்று ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது.
இதில், மறியல் போராட்டத்தை வாபஸ் பெற அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என மீனவர்கள் திட்டவட்டமாக கூறியதால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து இன்று (ஆக.,19) ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் காலை 10:00 மணிக்கு பின் மீனவர்கள் ரயில் மறியல் நடத்த முடிவு செய்தனர்.
இதனால் தங்கச்சிமடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.