ADDED : அக் 12, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும், 4 விசைப்படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் மீன்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசு, சகாயம், எமரிட், காரல் மார்க்ஸ் மற்றும் மீனவப் பெண்கள் பலர் பங்கேற்றனர்.