/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரையோரம் மீன்பிடித்த மீனவர் தப்பினர்: வலைகள் பறிமுதல்
/
கரையோரம் மீன்பிடித்த மீனவர் தப்பினர்: வலைகள் பறிமுதல்
கரையோரம் மீன்பிடித்த மீனவர் தப்பினர்: வலைகள் பறிமுதல்
கரையோரம் மீன்பிடித்த மீனவர் தப்பினர்: வலைகள் பறிமுதல்
ADDED : ஆக 23, 2025 11:33 PM
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடலில் விசைப்படகு மீனவர்கள் கரையோரத்தில் மீன் பிடித்த நிலையில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் துாரத்திற்குள் மீன்பிடிக்க கூடாது. அதையும் மீறி சில விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து கரையோரம் மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படு கின்றனர். அவர்களின் மீன்பிடி வலைகளும் சேதமடைகின்றன. மேலும் இரு மீனவர்களிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலில் கரையோரம் மீன்பிடித்த தொண்டி விசைப்படகை அந்த மாவட்ட மீன்வளத்துறையினர் மற்றும் மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் விடுவிடுவிக்கப்பட்டது. நேற்று தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ., குருநாதன் ஆகியோர் நம்புதாளை முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலில் ரோந்து சென்றனர்.
அப்போது எஸ்.பி.பட்டினம் கடலில் கரையோரம் ஒன்றரை நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்த விசைப்படகு மீனவர்களை பார்த்தனர். போலீசாரை பார்த்ததும் இரு விசைப்படகு மீனவர்கள் வலைகளை அறுத்து விட்டு படகை வேகமாக செலுத்தி தப்பினர். இதையடுத்து வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

