/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களின் கடல் ஓசை எப்.எம்., பாம்பனில் பத்தாம் ஆண்டு விழா
/
மீனவர்களின் கடல் ஓசை எப்.எம்., பாம்பனில் பத்தாம் ஆண்டு விழா
மீனவர்களின் கடல் ஓசை எப்.எம்., பாம்பனில் பத்தாம் ஆண்டு விழா
மீனவர்களின் கடல் ஓசை எப்.எம்., பாம்பனில் பத்தாம் ஆண்டு விழா
ADDED : ஆக 10, 2025 02:33 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்காக துவங்கிய கடல் ஓசை எப்.எம்., வானொலியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
கடல் ஓசை எப்.எம்., நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, பெரம்பலுார் வள்ளலார் குழுமம் நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கே.வி. கே., குழுமம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பின் மீனவர் குடும்பங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது வருமானமா, நிர்வாகமா எனும் தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. விழாவில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். முன்னதாக கடல் ஓசை நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பேசிய தாவது:
கடல் ஓசை எப்.எம்., நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு இயற்கை சீற்றம், காற்றின் வேகம் குறித்து தகவல் தெரிவித்து, மீனவர்களின் நண்பனாக செயல்படுகிறது.
மேலும் வலையில் சிக்கும் ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விடும் மீனவர்களுக்கு கடல் ஓசை சார்பில் ரூ.1000 பரிசு வழங்கி பாராட்டுகிறோம். இந்த எப்.எம்., தொடர்ந்து மீனவ மக்களின் குரலாக செயல்படும் என்றார்.---