ADDED : டிச 10, 2025 08:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து ஒருசில கிராமங்களில் கண்மாய், வரத்து கால்வாய்களில் தண்ணீர் வரத்து துவங்கியது. முதுகுளத்துார் பகுதியில் உள்ள வரத்து கால்வாய், சிறுபாலங்களில் செல்லும் தண்ணீரில் ஏராளமானோர் மீன் பிடித்து வருகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடி நுட்பமான பத்தகட்டை என்பது மீன்பிடிக்கும் ஒரு முறையாகும்.இதில் கண்மாய், ஊருணிகளில் நீர் வரும் கால்வாய்களில் தடுப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறது. தற்போது இந்த நுட்பத்தை பயன்படுத்தி கிடாத்திருக்கை கிராமத்தில் மீன்பிடித்தனர். இதில் ஏராளமான சிறிய வகை கெண்டை மீன்கள் பிடிக்கப்பட்டது.

