/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மே 1ல் திருவெற்றியூர் கோயில் கொடியேற்றம்
/
மே 1ல் திருவெற்றியூர் கோயில் கொடியேற்றம்
ADDED : ஏப் 22, 2025 05:38 AM
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் மே 1 ல் நடக்கிறது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா மே 1 காலை 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக மே 5 ல் திருக்கல்யாணம், 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும்.
விழா நாட்களில் பூதம், அன்னம், வெள்ளி ரிஷபம், நந்தி, சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.