/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அப்துல் கலாம் பிறந்த நாள் நினைவிடத்தில் மலரஞ்சலி
/
அப்துல் கலாம் பிறந்த நாள் நினைவிடத்தில் மலரஞ்சலி
ADDED : அக் 16, 2025 05:41 AM
ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரம் அருகே அவரது நினைவிடத்தில் மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நேற்று அப்துல் கலாம் 94வது பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு எனுமிடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில அப்துல் கலாம் உறவினர்கள் நஜிமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் துஆ பிரார்த்தனை செய்து மலரஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அப்துல்கலாம் படித்த அரசு நடுநிலைப்பள்ளி எண் 1ல் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ராமநாதபுரம் விளையாட்டு கழக தலைவர் கராத்தே பழனிச்சாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.