/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் பனை விதை நடுவோருக்கு அரசு சான்று

ADDED : அக் 16, 2025 05:42 AM
ராமநாதபுரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அக்.,21 வரை பனை விதைகள் நடுவோருக்கு தமிழக அரசின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் ஜாஸ் கல்வி நிறுவனத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை பசுமை தீபாவளி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் அமைப்பாளர் முகமது சலாவுதீன் பேசுகையில், கலாம் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக பசுமை தீபாவளி பனைவிதை நடுதல் திட்டத்தில் மாவட்டத்தில் அக்.,21 வரை பனை விதை நடுவோருக்கு தமிழக அரசின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்டத்தில் பசுமை, சுற்றுச்சூழலை மேம்படுத்த வனத்துறை, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், கல்லுாரி, பள்ளிகள் மூலம் 20 லட்சத்து 40 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆசிரியர்கள் விஜய், புவனேஸ்வரி, தீபசரண்யா, நிறைமதி, காயத்ரி, ஜெயசீலி உட்பட மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.