UPDATED : நவ 21, 2026 06:26 PM
ADDED : நவ 21, 2026 06:26 PM
ரெகுநாதபுரம்: கால்நடைகளின் தீவனங்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிக்கலை சந்திக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு வகையான அடர் தீவனங்கள் மற்றும் மூலப்பொருள்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடலை புண்ணாக்கு ரூ. 65க்கும், குச்சி தீவனம் மூடை 50 கிலோ கொண்டது ரூ. 1500 க்கும், கோதுமை தவிடு பாசி குருணை 50 கிலோ மூடை ரூ. 1650 க்கும், பருத்தி விதை மூடை ரூ. 2500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த தீவன வியாபாரி தர்மராஜ் கூறியதாவது:
மூலப்பொருள்கள் தட்டுப்பாடு நிலவுவதால் தீவனம் தயாரிக்க தேவையான மக்காச்சோளம், சோயா பீன்ஸ் மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பல இடங்களில் வறட்சி நிலவுவதால் பசுந் தீவன உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடை தீவனங்களை விவசாயிகள் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கால்நடை தீவனம் மூடைக்கு ரூ.100 முதல் 150 வரை விலை உயர்ந்துள்ளது என்றார்.
