ADDED : டிச 19, 2024 04:44 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத்தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார். நிர்வாகிகள் அம்சவள்ளி, வெங்கடேஷ், சத்யா, ஆரோக்கிய மேரி, மேகலா முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர்ஆர்.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சோமசுந்தர், ஓய்வு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர்கள் ராஜேந்திரன், அம்பிராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தனலெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராணி பேசினர்.
சத்துணவு திட்டத்தில் 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களில் கல்வித்தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும்.ரூ.3000 தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் மார்த்தாண்டன் நன்றி கூறினார்.