/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் எம்.பி., நீதிமன்றத்தில் ஆஜர்
/
முன்னாள் எம்.பி., நீதிமன்றத்தில் ஆஜர்
ADDED : மார் 11, 2024 11:18 PM
ராமநாதபுரம் : மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலின் போது போகலுாரில் கொரோனா காலத்தில் கூட்டம் சேர்த்ததாக முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா உட்பட 7 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
போகலுார் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தல் 2021ல் நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் பி.எம்.மாரி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா உட்பட நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது கொரோனா காலம் என்பதால் நிர்வாகிகள் கூட்டமாக திரண்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரில் சத்திரக்குடி போலீசார் அ.தி.மு.க., வேட்பாளர் பி.எம்.மாரி, முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, போகலுாரை சேர்ந்த சுரேஷ், பாஸ்கரன், வீரகணபதி உட்பட பலர் மீது வழக்குப்பதிந்தனர்.
வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 ல் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் மார்ச் 18 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். -----------

