ADDED : செப் 01, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : சத்திரக்குடி அருகே உள்ள எஸ். காரைக்குடி கிராமம் கீழக்கரை அளவாய்கரைவாடி கிரமத்தை சேர்ந்த ஏழை மணப்பெண்களுக்கு நாடார் மகாஜன சங்கம் சார்பில் இலவசமாக திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கீழக்கரையில் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், ராமநாதபுரம் மாரியப்பன் சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குகன், திருப்புல்லாணி ஒன்றிய நாடார் மகாஜன சங்க தலைவர் ஜெயமுருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.