ADDED : பிப் 15, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி புதிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
செயலாளர் டாக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
கண்ணில் நீர் வடிதல், மாறுகண், கண்புரை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப் பட்டது.
டாக்டர்கள் யாசர் அராபத், ராஜேந்திரன், ராமச்சந்திரன், வர்த்தக சங்க தலைவர் அபுபக்கர், முத்துச்செல்வம் பங்கேற்றனர்.

