நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குத்துக்கல் வலசையில் முத்தரையர் சங்கம் மற்றும் கோவை அவிநாசி பல்கலை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாம் ஏற்பாடுகளை பல்கலை உணவு பணி மேலாண்மை திட்டவியல் துறை ஆய்வாளர் ஆதித்தியா லட்சுமி, அரவிந்த் கண் மருத்துவமனை முருகேசன், முத்தரையர் சங்கத் தலைவர் முத்து கருப்பன், பொருளாளர் பிச்சை உட்பட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்புரை நோய், கிட்ட பார்வை துாரப்பார்வை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக 40 பேர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.