/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலவச கொத்தனார் கான்கிரீட் பயிற்சி
/
இலவச கொத்தனார் கான்கிரீட் பயிற்சி
ADDED : ஆக 31, 2025 11:30 PM
ராமநாதபுரம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் இணைந்து கொத்தனார், கான்கிரீட் பயிற்சி நடத்தவுள்ளது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார், கடலாடி, கமுதி, பரமக்குடி பகுதியை சேர்ந்த 19 முதல் 45 வயதுடைய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியானது முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடர்ந்து 30 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும்.
பயிற்சியின் போது காலை, மாலை தேநீர், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். புதிய தொழில் தொடங்கவும், வங்கிக்கடன் பெறவும் ஆலோசனை அளிக்கப்படும். பயிற்சிக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 88259 54443, 80567 71986 எனும் அலைபேசி எண்ணில் செப்.5 க்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.