ADDED : டிச 11, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மதிய உணவுத் திட்டம் மற்றும் ராக்ஸ் மருத்துவமனை, கே.ஆர்.எஸ்., நியூ லைப் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர் கமலி பொதுமக்களுக்கு இ.சி.ஜி., சர்க்கரை அளவு, முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கி மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தார்.
ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

