ADDED : ஜூலை 10, 2026 03:34 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைப்பதால் குடியிருப்பு வாசிகள் அவதிஅடைகின்றனர். இதனை தடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் தெரிவித்தனர்.
மாதர் சங்கம் தலைவர் கவுரி கூறியதாவது:
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதன் அருகே உள்ள ராமநாதபுரம் நக ராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ந்து தீ வைப்பதால் 3 கி.மீ., சுற்றளவுக்கு புகை மூட்டமாக உள்ளது. இதனால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற் படுகிறது.
குடியிருப்பில் கழிவு நீர் அகற்றம், சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
