/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் புதிய வேளாண் துறை அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
/
கடலாடியில் புதிய வேளாண் துறை அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
கடலாடியில் புதிய வேளாண் துறை அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
கடலாடியில் புதிய வேளாண் துறை அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
ADDED : செப் 13, 2025 03:48 AM
கடலாடி: கடலாடி வேளாண் துறை உதவி இயக்குனர் அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. கட்டடத்தின் தன்மை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
கடலாடியில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் 1960ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட 53 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அலுவலகத்திற்கு வருகின்றனர். துறை அலுவலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டடம் இல்லாமல் குறுகியதாக இருந்ததால் அலுவலர்களும் அலுவலகம் வரக்கூடிய விவசாயிகளும் சிரமப்பட்டனர்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பெயரளவில் மராமத்து பணிகள் பார்க்கப்பட்டன. இந்நிலையில் சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில் கடலாடி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வேளாண் துறைக்கு சொந்தமான சேதமடைந்த கட்டடம் ஆகியவற்றை இடித்து அகற்றிவிட்டு ரூ.2 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம், தோட்டக்கலைத்துறை, உதவி செயற்பொறியாளர், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வர உள்ளதாக தெரிவித்தனர்.