/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகர் சிலை ஆக.27 ல் பிரதிஷ்டை; 28, 29ல் விசர்ஜனம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகர் சிலை ஆக.27 ல் பிரதிஷ்டை; 28, 29ல் விசர்ஜனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகர் சிலை ஆக.27 ல் பிரதிஷ்டை; 28, 29ல் விசர்ஜனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகர் சிலை ஆக.27 ல் பிரதிஷ்டை; 28, 29ல் விசர்ஜனம்
ADDED : ஆக 06, 2025 12:43 AM

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகர் சிலைகள் ஆக.,27 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆக.,28, 29ல் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா ஆக.,27ல் கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி இயக்கம் சார்பில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, கடலாடி, திருப்பாலைக்குடி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம், ஏர்வாடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் ஆக.,27 விநாயகர் சதுர்த்தி அன்று சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
சிறப்பு பூஜைகளுடன் ஆக.,28, 29 ல் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் எடுத்துவந்து நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. வழிபாட்டின் நிறைவாக 'கணபதி பாப்பா மோரியா' என பக்தர்கள் பாடுகின்றனர். மங்களம் தரும் விநாயகனே இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருளாகும்.
ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: இவ்வாண்டு 600 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக விழுப்புரத்தில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தண்ணீரில் எளிதாக கரைக்கூடிய விநாயகர் சிலைகள் வருகிறது. ரெகுநாதபுரத்தில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டு அங்கு இயற்கையான வர்ணம் பூசப்படும்.
நமது சுவாமி, நமது கோயில், நாமே பாதுகாப்போம் என்ற பிரசாரத்தை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஹிந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாக விநாயகர் சதுர்ததி விழாவை நடத்த உள்ளோம். இதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி, கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.