/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சதுர்த்தி விழாவில் விநாயகர் வீதியுலா
/
சதுர்த்தி விழாவில் விநாயகர் வீதியுலா
ADDED : ஆக 19, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கின்றன.
விழாவின் தொடர்ச்சியாக தினமும் மாலையில், வெள்ளி மூசிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.
இந்த நிலையில், முதல் நாளில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற விநாயகருக்கு பெண்கள் தெருக்களில் மாக்கோலம் இட்டு வரவேற்று வழிபாடு செய்தனர்.
முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.