/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம சேவை மையங்களில் பேட்டரி திருடும் கும்பல்
/
கிராம சேவை மையங்களில் பேட்டரி திருடும் கும்பல்
ADDED : அக் 09, 2025 04:32 AM
திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம சேவை மையங்களில் யு.பி.எஸ்., பேட்டரி திருடும் கும்பலை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 83 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மையங்களை அந்தந்த ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப் படைத்து அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து செயல்பட்டு வருகிறது.
கம்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இன்டர்நெட் வசதிகள் செய்யப்பட்டு செயல்படுகிறது. இந் நிலையில் கடந்த சில நாட்களாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராம சேவை மையம் உள்ளிட்ட ஊராட்சி அலுவலகங்களில் கம்யூட்டர், மற்றும் யு.பி.எஸ்.பேட்டரிகளை சிலர் திருடிச் செல்கின்றனர்.
இது குறித்து திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் கூறியதாவது: அலுவலகங்களில் நுழையும் திருடர்கள் பேட்டரிகளை குறி வைத்து திருடிச் செல்கின்றனர். திருட்டை கண்டுபிடிக்க திருவாடானை இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கட்டங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் சிசிடிவி.,கேமரா வைக்க அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவத்திற்கு யாரும் உடந்தையாக உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். விரைவில் திருடர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.