/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
/
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பாலியல் வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : ஜூலை 30, 2025 11:21 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டார்.
தேர்த்தங்கல் பகுதியை சேர்ந்த வர் பூமுருகன் 38, இவர் கடந்த மாதம் அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக நயினார்கோவில் போலீசார் பூ முருகனை கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவர் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் பூமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் சிறையில் இருந்த பூமுருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.