/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா கடத்தல்: திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தொண்டியில் விசாரணை
/
கஞ்சா கடத்தல்: திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தொண்டியில் விசாரணை
கஞ்சா கடத்தல்: திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தொண்டியில் விசாரணை
கஞ்சா கடத்தல்: திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் தொண்டியில் விசாரணை
ADDED : மார் 14, 2024 10:42 PM
திருவாடானை, - திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் 875 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தில் விசாரணை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசங்கரை கடற்கரை வழியாக போதை பொருள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக திருச்சி மத்தியநுண்ணறிவுப் பிரிவு சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சேமன்கோட்டை இறால் பண்ணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா ஆயில், 875 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இறால் பண்ணை உரிமையாளர் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் சுல்தானை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தொண்டி மரைன் போலீசார் உதவியுடன் திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் சுல்தான் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். சுல்தானுடன் முக்கிய நபர்கள் தொடர்பு உள்ளவர்களா என்றும் விசாரிக்கப்படுகிறது.