/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வாறுகாலில் வீசப்படும் கழிவுகள்
/
பரமக்குடி வாறுகாலில் வீசப்படும் கழிவுகள்
ADDED : அக் 03, 2024 04:25 AM

பரமக்குடி: துாய்மையான, சுகாதாரமான நகரத்தை உருவாக்கும் வகையில் வாறுகால்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, பொதுமக்களுக்கு பரமக்குடி நகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்குள்ள 36 வார்டுகளை கடந்து அருகில் உள்ள பகுதிகள் இணைந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டதாக நகராட்சி உருவாகி வருகிறது. இங்கு தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு அதிகளவில் உள்ளது.
மேலும் அனைத்து வகையான உணவுப் பொருட்களும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வருவதால் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பை சேர்கிறது.
மேலும் புதிதாக வீடு கட்டுவோர், வாறுகால்களை மறைத்து குப்பை் அள்ள முடியாதபடி கட்டி விடுகின்றனர்.
இதனால் ஒவ்வொரு பகுதி சாக்கடைகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு குப்பையை தரம் பிரித்து நகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கின்றனர்.
இருப்பினும் தெருக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுகாதாரமற்ற சூழல் அதிகரிக்கும் நிலை உள்ளது.
ஆகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு துாய்மை பாரதம் இயக்கம் வெற்றி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.