ADDED : ஜூலை 07, 2026 04:22 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானையில் சேகரிக்கப்படும் குப்பை கண்மாய் மற்றும் சாலையோரங் களில் கொட்டப்படுகிறது.
இந்த குப்பையில் தீ வைப்பதால் ரசாயன கழிவுகள் எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை பரவுகிறது. புகை சூழ்வதால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. பண்ணவயல் கிராம மக்கள் கூறுகையில், புகை மூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. விபத்து அபாயம் உள்ளது என்றனர்.
