/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகள் இல்லத்தில் குப்பையான பொருட்கள்
/
குழந்தைகள் இல்லத்தில் குப்பையான பொருட்கள்
ADDED : நவ 21, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் சமூக நலத்துறை சார்பில் அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம் செயல்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி சேதமடைந்த கட்டில், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் வளாகத்திற்குள் குப்பையாக கிடக்கிறது.
அவ்விடத்தில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் இல்லத்தில் குவிந்து கிடக்கும் பழைய பொருட்களை அப்புறப்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

