ADDED : நவ 21, 2025 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: இன்னர் வீல் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ஹரிதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லீனா, செயலர் கவிதா, நிர்வாகிகள் கீதா, லட்சுமிவர்த்தினி முன்னிலை வகித்தனர்.
தையல் இயந்திரம், ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலி, துப்புரவு பணியாளர்களுக்கு ஆடைகள், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை, சிறு தொழில் செய்யும் விதவைப் பெண்ணுக்கு சமையல் உபகரணம், மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. பொருளாளர் கவிதா, நிர்வாகிகளான சிவப்பிரியா, அனுப்பிரியா ஏற்பாடுகளை செய்தனர்.

