/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நர்சிங் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி: தாட்கோ ஏற்பாடு
/
நர்சிங் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி: தாட்கோ ஏற்பாடு
நர்சிங் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி: தாட்கோ ஏற்பாடு
நர்சிங் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி: தாட்கோ ஏற்பாடு
ADDED : ஆக 05, 2025 11:59 PM
ராமநாதபுரம்:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நர்சிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப் படவுள்ளது.
இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் பேறுகால மருத்துவம் (ஜி.என்.எம்.,) டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சிக்காலம் ஒன்பது மாதங்கள். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுத்தொகை தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியானவர்கள் ஜெர்மனியில் பணிபுரிய அனுப்பப்படுவர். மாத ஊதியமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கிடைக்கும். பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணைய தளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.