ADDED : ஜூலை 05, 2025 11:13 PM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஆட்டோ மோதி ஏறி இறங்கியதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த சிறுமி பலியானார்.
ராமநாதபுரம் வெளிபட்டணம் சின்னகடை பாசிபட்டறை தெருவை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன். இவரது மகள் பாராசம்ரின் 3. நேற்று முன் தினம் மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் வீட்டிலிருந்து ரோட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முகமது இலியாஸ் ஓட்டி வந்த ஆட்டோ பாராசம்ரின் மீது மோதியதில் கீழே விழுந்தவர் மீது ஆட்டோ ஏறி இறங்கியது. இதன் காரணமாக படுகாயமடைந்த குழந்தையை மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரா சம்ரின் நேற்று மாலை உயிரிழந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.