/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மிரட்டும் தெரு நாய்களுக்கு கு.க., அவசியம்: பீதியில் மக்கள்; நோய் தொற்று பரவும் வாய்ப்பு

ADDED : செப் 26, 2024 04:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகரில் தெரு நாய்களால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நாய்கள் ரோட்டின் குறுக்கே வருவதால் விபத்துக்களும் தொடர்ந்து நடக்கிறது.நோயால் பாதிக்கப்பட்ட நாய்களால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நாய்களுக்கு சிகிச்சை அளித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் நகர், அதனை சுற்றியுள்ள பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை, அச்சுந்தன்வயல் உள்ளிட்ட ஊராட்சிகளில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தெரு நாய்கள் உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. சில வெறி நாய்கள் மக்களை தாக்குகின்றன.
கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, மதுரை ரோடு, தினமலர் நகர், ராமேஸ்வரம் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, கலெக்டர் அலுவலக வளாக ரோடு பகுகளில் உலா வரும் நாய்களால் இரவு நேரங்களில் சிறிய அளவில் விபத்துக்களும் நடக்கிறது.
இதில் பலர் காயமடைகின்றனர். சில சமயங்களில் குட்டி நாய்கள் பலியாகின்றன. ஆகையால் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க தடுப்பூசி போட வேண்டும்.
தோலுரிந்த நோய்ப்பட்ட நாய்களை பிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.