ADDED : அக் 23, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயில் நோன்பு விழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
கோயிலில் கவுரி நோன்பு விழா அக்., 20 கும்ப ஸ்தாபனத்துடன் துவங்கி நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று ஊஞ்சல் உற்ஸவத்தில் அருள்பாலித்த நிலையில் இன்று காலை உற்ஸவ சாந்தி விழாவில் பாலபிஷேகம் நடக்கிறது.

