/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்
/
போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்
போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்
போலீசார் பாதுகாப்புடன் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கக்கவசம்
ADDED : நவ 01, 2025 11:29 PM
கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா அக்.,30ல் நிறைவடைந்தது.
இதற்காக அ.தி.மு.க., சார்பில் 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தங்கக்கவசத்தை அக்.,25ல் வங்கி லாக்கரில் எடுத்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
குருபூஜை நிறைவு பெற்றதையடுத்து நேற்று தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் முன்னிலையில் களையப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. உடன் நினைவாலய பொறுப்பாளர்கள், போலீசார் இருந்தனர்.