/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு நாள் அனுசரிப்பு
/
எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு நாள் அனுசரிப்பு
ADDED : நவ 01, 2025 11:29 PM
கீழக்கரை: கீழக்கரையில் தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் நவ.1ல் அனுசரிக்கப்பட்டது. தமிழ் திரைப்பட துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் இவர் மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகர். எம்.கே.டி.தியாகராஜ பாகவதரின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.கே.டி.பாகவதர் பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சேகர் முன்னிலை வகித்தார்.
நகர் தலைவர் பழனி, விஸ்வ ஐக்கிய சங்கத் தலைவர் முருகானந்தம் ஆச்சாரி, மனுமயா சங்கத் தலைவர் விஜயகுமார், சி.கே.வேலன், முருகேசன், மாடசாமி, பாஸ்கரன், நடராஜன், முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

