/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் சம்பள பில் ஓ.கே.,
/
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் சம்பள பில் ஓ.கே.,
ADDED : ஜன 23, 2025 03:57 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லாததால் பில் போட முடியாத நிலையில் தற்போது அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதால் சம்பள பில் போடும் பணியை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பள பில் தயாரிக்கப்பட்டு தாளாளரிடம் கையொப்பமிட்டு வட்டார, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளமான களஞ்சியம் ஆப்பில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான சம்பளபில் பதிவேற்றம் செய்யப்படும்.
அப்படி பதிவேற்றம் செய்யப்படும் போது நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பள பில் ஜெனரேட் ஆகாமல் இருந்தது. இதனால் ஜன., மாதத்திற்கான சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பில் போடும் பணிகளை அரசு உதவி பெறும் பள்ளிகள் மாதத்தின் 15 ம் தேதியில் இருந்தே துவக்கி விடுவார்கள். பில் ஜெனரேட் ஆகாததால் சம்பளம் கிடைக்குமா என்ற அச்சத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் இருந்தனர்.
இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முதல் களஞ்சியம் ஆப்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பில் ஜெனரரேட் ஆக தொடங்கியுள்ளது.
தினமலர் செய்தி எதிரொலியாக பில் ஜெனரேட் ஆவதால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.